Ticker

6/recent/ticker-posts

Ad Code

14 கிராமங்கள்; 200க்கும் மேல் சீர் வரிசை; 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஏலகிரி அம்மன் திருவிழா!

ஏலகிரி, தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இருக்கும் ஏலகிரியில் சுமார் பதினான்கு கிராமங்கள் உள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறார்கள். இயற்கை எழில் சூழ்ந்த இந்த கிராமங்களில் பல கோயில்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு நடைபெறும் அம்மன் வழிபாடும் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்றது. இந்தத் திருவிழாவில் பதினான்கு கிராம மக்களும் கலந்துகொள்வார்கள் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம்.

மேட்டுக்கணியூர் சக்தி அம்மன்

ஏலகிரியில் உள்ள மலைக்கிராமங்களில் ஒன்று மேட்டுக்கணியூர். இங்கு சக்திவாய்ந்த அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனை வணங்கி வேண்டிக்கொண்டால் அனைத்துத் துன்பங்களும் விலகும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. இந்த அம்மனுக்குத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விழா எடுக்கிறார்கள் ஊர்மக்கள்.

மாசி மாதத்தின் முதல் வாரத்தில் இந்தத் திருவிழா தொடங்கும். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஏலகிரியில் உள்ள பதினான்கு கிராம மக்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நல்ல முறையில் மழைபெய்து விவசாயம் செழிப்பதோடு தீமைகள் எதுவும் அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை.

இந்த ஆண்டுத் திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. திங்கட்கிழமை அன்று திருவிழாவுக்குக் கொடியேற்றம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையில் பதினான்கு கிராம மக்களும் கூடி அம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மூன்றாம் நாள் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு தங்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ப சீர் வரிசை கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். மக்கள் நீண்ட வரிசையாக நடந்து வந்து அம்மனுக்கு சீர் வரிசை செலுத்திய காட்சியைக் கண்டு பொதுமக்கள் சிலிர்த்தனர். மேலும் அம்மனுக்கு மாடு, ஆடு, கோழி ஆகியவையும் பலியிடப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

ஏலகிரி திருவிழா
ஏலகிரி திருவிழா
அம்மன் கோயில் திருவிழா

பாரம்பர்யமான இந்த விழாவை சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மூன்று நாள்களும் இரவில் தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் நிகழ்த்தப்பட்டன. இதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். திருவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



from Latest News

Post a Comment

0 Comments