சமீபத்தில் கோவிட் பாசிட்டிவ்வாகி மீண்டேன். அதற்கடுத்து பத்து நாள்களாக எனக்கு களைப்பும் தூக்கமும் அதிகமாக இருக்கிறது. பலமணி நேரம் தூங்கிக்கொண்டே இருக்கிறேன். இதற்கும் கொரோனாவுக்கும் தொடர்பிருக்குமா?
- ராம்நாத் காவ்லே (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடும்பநல மருத்துவர் மரியசெல்வ ரஞ்சனி.
``கோவிட் தொற்றுக்கு உள்ளாகிறவர்கள் அடுத்த சில நாள்களுக்கு இப்படி களைப்பாக, அசதியாக உணர்வது சகஜம்தான். சிலருக்கு காலையில் பிரஷ் செய்வதில் தொடங்கி, சாதாரணமாக நடப்பது, டிரெஸ் செய்வது, சாப்பிடுவது என அன்றாட வேலைகளைச் செய்யவே சோம்பலாக, களைப்பாக இருக்கலாம். உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து போனதுதான் காரணமாக இருக்கலாம். தீவிர நோய்த்தொற்றுக்குள்ளாகி, ஆக்ஸிஜன் அளவு குறைந்தவர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும்கூட தீவிரமாக இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமான பிரச்னையாக இருக்காது. மெள்ள மெள்ள உங்கள் உடல் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும்.
நோயிலிருந்து முற்றிலும் குணமானதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கலாம். அப்படிச் செய்து உங்கள் உடல் சுறுசுறுப்பாகும்போது இந்த அறிகுறிகள் தாமாக மறையும்.
Also Read: Doctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?
மருத்துவ ஆலோசனையோடு வைட்டமின் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சரிவிகித உணவும், முறையான தூக்கமும் அவசியம். இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்டாலே உங்கள் பிரச்னை சரியாகும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News
0 Comments