ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக சொல்லப்படும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, உக்ரைன் நாட்டு எல்லையில், ஆயுதங்களுடன் கூடிய 1 லட்சம் வீரர்கள் கொண்ட தனது ராணுவப்படையை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் நிலை உள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னதாக, `தங்கள் நாடு உண்மையில் உக்ரைன் மீது போர்தொடுக்க விரும்பவில்லை’ என கூறியுள்ளார். அதே சமயம், `மேற்கத்திய நாடுகள், உக்ரைன் எல்லையில் தங்களது படைகளைக் குவிக்கப்போவதில்லை என உறுதியளிக்க வேண்டும்’ என்று ரஷ்யா வலியுறுத்தியிருக்கிறது.
இந்தநிலையில், "ரஷ்யா உண்மையில் போர்தொடுக்க விரும்பவில்லையென்றால் எல்லையில் குவித்திருக்கும் படைகளை விலக்கிக்கொண்டு, அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும்" என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, இன்று நடைபெறும் ஐ.நா கூட்டத்தில், உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப்பெற வேண்டுமென ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Also Read: அதிகரிக்கும் ரஷ்யா - உக்ரைன் எல்லைப் பதற்றம்... போர் மூளுமா?!
from Latest News
0 Comments