Ticker

6/recent/ticker-posts

Ad Code

மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை கொன்ற மனைவி: பெண்ணை விடுவிக்க முடிவு

குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த மனைவி. தற்காப்புக்காக கொலை நிகழ்ந்ததால் மனைவி விடுவிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

சென்னை, ஓட்டேரி வாழைமா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு 20 வயது மகள், 10 வயது மகன் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான பிரதீப் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

image

இதே போல் நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பிரதீப் தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா தனது கணவரிடம் இருந்து மகளை மீட்க போராடினார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து கணவர் பிரதீப் மண்டையில் அடித்து கொலை செய்தார்.

இதில் பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இது குறித்து உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பிரதீப் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுதொடர்பாக மனைவி பிரீத்தாவையும் கைது செய்தனர். இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மகள், மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

இந்த நிலையில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட தந்தையை கொலை செய்த தாய், தற்காப்பிற்காக தாக்கியதால் இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்கு பிரிவை மாற்றி தாயை விடுவிக்க சென்னை ஓட்டேரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தற்போது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302- கொலை என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 100ன் படி தற்காப்பு உரிமையை பயன்படுத்தும் இறப்பு நிகழுதல் என்ற அடிப்படையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு கொலை சம்பவத்தில் திருவள்ளூர் எஸ்பியாக இருந்த அரவிந்தன், கொலை செய்த பெண்ணை கைது செய்யாமல் விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments