வரும் பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என குடியரசு தினத்தன்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். அதன்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுமுதல் தொடங்கியது. இந்த நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல்நாளே கோவை, ஈரோடு, ராமநாதபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி வார்டு பதவிகளுக்கு ஒரு வேட்பாளர் கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
முன்னதாக சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். நேற்றைய தினம் பெரிதாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று பலர் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் பிப்ரவரி 4-ம் தேதியாகும். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு, பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்புமனுத் தாக்கல் திரும்பப்பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்” - தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு!
from Latest News
0 Comments