ஆஸ்திரேலியாவில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு வருகை தந்த மருத்துவருக்கு படுகர் இன மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கோத்தகிரி திம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவருமான மருத்துவர் ஜெகதீஷ், ஆஸ்திரேலியாவின் ரிவர்டன் பகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த ஆண்டு பொறுப்பேற்றுள்ளார்.
அதன்பின் முதன்முறையாக சொந்த ஊர் வந்த அவரை இசைக்கருவிகள் முழங்க பாரம்பரிய நடனமாடி படுகர் இன மக்கள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments