Ticker

6/recent/ticker-posts

Ad Code

"போரை விரும்பாவிட்டால் படைகளை திரும்பப் பெறுக" - ரஷ்யாவிடம் உக்ரைன் வலியுறுத்தல்

ரஷ்யா உண்மையில் போரை விரும்பவில்லை என்றால் எல்லையில் குவித்துள்ள படைகளை விலக்கிக்கொண்டு மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒருலட்சம் வீரர்களை குவித்துள்ள நிலையில் எந்த நேரத்திலும் அந்த நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என அச்சம் நிலவுகிறது. அவ்வாறு போர் தொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை எச்சரித்து வருகின்றன.

image

இந்த நிலையில் தங்கள் நாடு போர் தொடுக்க விரும்பவில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் உக்ரைனில் படைகளை குவிக்கப்போவதில்லை என மேற்கத்திய நாடுகள் உறுதியளிக்கவேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் போரை விரும்பவில்லை என ரஷ்யா கூறுவது உண்மையானால் ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகளை தொடரவேண்டும் என்றும் உக்ரைனின் எல்லைப் பகுதிகளில் குவித்து வைத்திருக்கும் படைகளை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பின்னணியில் இன்று ஐநா கூட்டத்தில் படைகளை திரும்பப்பெறவேண்டும் என ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments