அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள பாலம் உடைந்து விழுந்து சிலர் காயமடைந்தனர். பிட்ஸ்பர்க்குக்கு அதிபர் பைடன் செல்வதற்கு சில மணி நேரங்கள் முன்பு இவ்விபத்து நேரிட்டுள்ளது
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க்கில் 50 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. அதிகாலை நேரத்தில் அப்பாலம் திடீரென 3 பாகமாக உடைந்து விழுந்தது. பாலம் உடையும் போது அதில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் கீழே விழுந்தன. ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்தது. ஒரு பேருந்து இடிபாடுகளுக்குள் சிக்கியது. எனினும் இவ்விபத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 10 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே அப்பகுதிக்கு அதிபர் பைடன் சென்று பார்வையிட்டார். பாலம் உடைந்த விபத்தில் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதது மிகப்பெரிய அதிசயம் என அதிபர் பைடன் அப்போது வியப்பு தெரிவித்தார். நாட்டில் உள்ள பாலங்களின் உறுதித்தன்மை கண்டறியப்பட்டு சீரமைப்பு செய்யப்படும் என்றும் பைடன் தெரிவித்தார். இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments