Ticker

6/recent/ticker-posts

Ad Code

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் சரண்ஜித்சிங் சன்னி!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித்சிங் சன்னி இரண்டு தொகுதிகளில் களம்காண்கிறார்.

இந்தியாவில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சன்னி, ராகுல்

இந்த 5 மாமாநிலங்களில் பஞ்சாப்பில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அதனால், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அந்தக் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. காங்கிரஸ் கட்சி நேற்று 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உட்பட 8 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அமரீந்தர் சிங்

பஞ்சாப்பின் பதவுர் சட்டப்பேரவை தொகுதியில் சரண்ஜித்சிங் சன்னி போட்டியிடுகிறார். அதேபோல, சம்கவுர் சாகிப் தொகுதியிலும் போட்டியிடுகிறார். எந்தவொரு தனி நபரும் ஒரு தேர்தலில் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் போட்டியிடலாம். அந்த வகையில், சரண்ஜித் சன்னி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியிருக்கும் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை எதிர்த்து பாட்டியாலா முன்னாள் மேயர் விஷ்ணு சர்மாவைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாஜக, காங்கிரஸ் சமபலத்துடன் மோதிக்கொள்ளும் `மணிப்பூர் தேர்தல் களம்' எப்படியிருக்கிறது?!



from Latest News

Post a Comment

0 Comments