மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது மதுபானக் கடைகளில் மட்டுமே ஒயின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள கடைகளில் ஒயின் விற்பனை செய்யலாம் என்றும் அதே நேரத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே விற்பனை செய்யக் கூடாது என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ளார். அரசின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments