மதுரையில், ரோந்து பணியில் ஈடுபட்ட இரு காவலர்கள் மீது கட்டடத்தின் முதல் மாடி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், தலைமைக் காவலர் உயிரிழந்தார். நெல்பேட்டை அடுத்த மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்ற 2 போலீசார் மீது பழைய கட்டடத்தின் முதல் மாடி தடுப்புச் சுவர் விழுந்தது. இதில் தலைமைக் காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் பழங்கால கட்டிடங்கள் அடிக்கடி இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதால் 80 ஆண்டு கடந்த பழங்கால கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments