நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கொரோனா பாதிப்புகள் குறைந்து தடுப்பூசி திட்டம் அதிகரித்து வருவதால் ஜூலை 19ம் தேதி மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 13 வரை 20 அமர்வுகள் வரை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த அமர்வின் காலம் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது, மேலும் தேதிகள் குறித்த இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத் தொடரில் கொரோனா தொடர்பான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று கூறிய அதிகாரிகள், எம்பிக்கள், நாடாளுமன்ற அதிகாரிகள் என அனைவரும் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்திருப்பார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments