BMW குழுமத்தின் புதிய தயாரிப்பான ஐஎக்ஸ் மின்சாரக் கார் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. டிசம்பர் 13ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் இந்தக் கார் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட நிலையில் வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மறு சுழற்சி செய்யும் வகையில் அபூர்வமான தனிமத்தினால் அமைக்கப்பட்டுள்ள பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதாக BMW கூறியுள்ள நிலையில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 425 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லமுடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஐஎக்ஸ் மின்சாரக் கார் ஸ்டார்ட் செய்த 6 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும் BMW நிறுவனம் கூறியுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments