Ticker

6/recent/ticker-posts

Ad Code

சிக்னலை மதிக்காதததால் விபரீதம்... லாரியின் மீது மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!

சீனாவில் அதிக பாரம் ஏற்றிய லாரி ஒன்று இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதிய காட்சியும், அதிலிருந்து அவர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சியும் வெளியாகி உள்ளது. ஷெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ஷெங் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னலில் ஒளிர்ந்த சிவப்பு விளக்கையும் மீறி அவர் சென்ற போது பக்கவாட்டுத் திசையில் வேகமாக வந்த பிரமாண்ட லாரி ஒன்று ஷெங் மீது மோதியது. இதில் அவர் லாரியின் சக்கரங்களில் உரசியபடி நூலிழையில் தப்பினார். ஷெங் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டினை இழந்த லாரி கவிழ்ந்தது. லாரியில் இருந்த உருளைகள் விழுந்ததில் கார் ஒன்றும் பலத்த சேதமடைந்தது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments