வாரிசு அரசியலால் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அரசியல் கட்சிகளின் தலைமை கைமாற்றப்படுவதால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக குறிப்பிட்டார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். குடும்பத்தினரால் குடும்பத்தினருக்காக நடத்தப்படும் கட்சிகள் என்றும் மோடி சாடினார். இக்கூட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments