Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஆங்கிலப் படத்தில் நடிக்கும் சமந்தா! துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்கிறாரா?

மீண்டும் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார், சமந்தா. தமிழ், தெலுங்கில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கிறார். அத்துடன் ஹிந்தி திரைப்படங்களிலும், சில வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த வருடம் வந்த 'Family Man 2'-ல் சமந்தா நடித்த கதாபாத்திரம் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று தந்திருக்கிறது. இப்போது Downton Abbey, Outlander, Iron Fist போன்ற பிரபல வெப் சீரிஸை இயக்கிய பிலிப் ஜான் இயக்கத்தில் ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா. 'The Arrangements of Love' என்ற இந்தப் படத்தில் நடிப்பது குறித்த செய்தியை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச திரையுலகில் கால்தடம் பதிக்கிறார்

சமந்தா | Samantha
2004-ம் ஆண்டில் வெளியான 'The Arrangements of Love' என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவிருக்கிறார்.
The Arrangements of Love

Also Read: ``சமந்தா சினிமால முன்னேற ஒரே காரணம்தான்?!'' - #10YearsOfBaanaKaathadi

இந்த நாவல் வெளிவந்தபோது புத்தகத்தில் வரும் இங்கிலாந்தில் வாழும் இருபால் ஈர்ப்புடைய தமிழ் பெண் கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. இந்தக் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமந்தா | Samantha

எப்பொழுதும் துணிச்சலான கதாபாத்திரத்தை விரும்பி ஏற்று நடிப்பவர், சமந்தா. தொடர்ச்சியாக போல்டான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருட ஆகஸ்ட்டில் தொடங்குகிறது.



from Latest News

Post a Comment

0 Comments