சுற்றுலாவுக்கு பெயர் போன ஐரோப்பிய தீவான மால்டாவில் கொட்டித் தீர்த்த கனமழையால், நாடே நீரில் தத்தளிக்கிறது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டியதாக கூறப்படும் நிலையில், விளை நிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வலெட்டா பர்மார்ரட் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை, சூறாவளி காற்றால் நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ள நிலையில், பெருக்கெடுத்து ஓடிய நீரில் காருடன் சிக்கிக் கொண்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments