Ticker

6/recent/ticker-posts

Ad Code

தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் மீது ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு!

தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் மீது ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், வங்கிக்கு எதிரான ஆதாரமற்ற, அதிர்ச்சியூட்டும் மற்றும் அவதூறான விளம்பரப் பலகைகள் மும்பை நகரெங்கும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கான நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் மத்தியில் வங்கியைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் நவாப் மாலிக் மற்றும் 7 பேர் மீது ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவில் குறிப்பிட்டுள்ளவர்கள் பதிலளிக்க 6 வார காலம் அவகாசம் அளித்துள்ளார்.      

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments