தைவானில் அமெரிக்க பிரதிநிதிகள் வந்திருந்த நேரத்தில் சீன விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 5 பேர் தைவானுக்கு வருகை தந்திருந்தனர். இதனால் எரிச்சலுள்ள சீனா, நேற்று தைவான் ஜலசந்தியைக் கடந்து 27 போர் விமானங்களை தைவானின் வான் எல்லைக்குள் பறக்க விட்டது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகளின் வருகை கண்டிக்கத்தக்கது என்றும், தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments