Ticker

6/recent/ticker-posts

Ad Code

சுவீடன் நாட்டின் பிரதமராக மீண்டும் மாக்டலெனா ஆண்டர்சன் தேர்வு!

சுவீடன் நாட்டின் பிரதமராக மாக்டலெனா ஆண்டர்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டெலனா ஆண்டர்சன், பட்ஜெட் தோல்வி, கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் 7 மணி நேரத்தில் ராஜினாமா செய்தார். தற்போது மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 54 வயதான மாக்டெலனா ஆண்டர்சன் பிரதமராக 73 ஆதரவு வாக்குகள் கிடைத்த நிலையில் 173 நிராகரிப்பு வாக்குகள் பதிவாகின. சுவீடன் நாடாளுமன்ற மரபுபடி பிரதமர் வேட்பாளர் பெரும்பான்மை ஆதரவு தேவையில்லை. அதேநேரம் நிராகரிப்பு வாக்குகள் 175-ஐ தொட்டால் வேட்பாளர் தோல்வியடைந்ததாக கருதப்படுவர்.    

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments