Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஓடி ஓடி பிடிக்கனும் துள்ளிய கெண்டையை பாய்ந்து பிடித்த கில்லி..! மீனுக்கு ஜாமீன் கிடைக்கல

வெள்ளத்தில் துள்ளிச்சென்ற பெரிய அளவிலான கெண்டை மீனை , உள்ளூர் கில்லி ஒருவர் பாய்ந்து சென்று வெறுங்கையால் லாவகமாக பிடித்து தூக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தண்ணீரில் தடுக்கி விழுந்தாலும் மீனுக்கு ஜாமீன் வழங்காத ஜமீன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. ஏதோ வெள்ளத்தில் விழுந்தவரை காப்பாற்றத்தான் புயலென கில்லி போல பாய்ந்து செல்கிறார் என்று தவறாக நினைத்து விடாதீர்கள், குளத்தில் இருந்து தப்பிச்செல்லும் மீன்களை பிடிப்பதற்குத்தான் இந்த பாய்ச்சல்.! ஆந்திர மாநிலம் நெல்லூரில் புரட்டி போட்ட கனமழையால் ஏரி குளங்கள் நிரம்பி பல சாலைகளில் வெள்ள நீர் மறுகால் பாய்ந்த நிலையில் அந்த வெள்ள நீரில் வரும் மீன்களை பிடிப்பதற்காக சாலைகளில் சிலர் தயாராக நின்றனர். அப்போது சாலையில் மறுகால் பாய்ந்த வெள்ள நீரில் பெரிய சைஸ் கெண்டை மீன் ஒன்று துள்ளிச்செல்ல, அதனை பார்த்த மீன் பிடிக்கும் கில்லி அடுத்த நொடியே பாய்ந்தார் புதருக்குள் சிக்கிய கெண்டை மீனை , வலையோ, தூண்டிலோ இல்லாமல் பாய்ந்த வேகத்தில் வெறுங்கையால் பிடித்து தூக்கினார். 3 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட அந்த மீனின் துள்ளலுக்கு ஈடுகொடுக்க இயலாமல் தண்ணீருக்குள் சறுக்கி விழுந்த போதும் கையில் சிக்கிய கெண்டை மீனுக்கு ஜாமீன் வழங்கவில்லை. அந்த மீனை ஜம் என்று இருக்கமாக பிடித்துக் கொண்டார் பெரிய சைஸ் மீனுடன் தனது நண்பர் கரையேற இயலாமல் படும் பாட்டை பார்த்து உடன் வந்த பங்காளி ஒருவர் பைகொடுக்க , அந்த பையில் போட்டு அந்த மீனை வீட்டுக்கு எடுத்துச்சென்றார் அந்த புயல் வேக கில்லி..! இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை பார்ப்போர், இந்தவகை மீன் பிடித்தல் என்பது எல்லோருக்கும் சாத்தியமாகாது, ஒற்றை மீனுக்காக சில நேரங்களில் ரத்தகாவல்லாம் கொடுக்க வேண்டி இருக்கும் என்று கமெண்டுகளால் தெறிக்க விடுகின்றனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments