மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அரசாணையில், தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணியிலால் ஆன சுற்றுச்சூழலிற்கு தீங்கு விளைவிக்காத மஞ்சப்பையை பயன்படுத்த, 'மீண்டும் மஞ்சப்பை' என்ற தலைப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக சென்னை கோயம்பேடு சந்தையினை பிளாஸ்டிக் இல்லா சந்தையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments