வங்கக் கடலில் அந்தமான் அருகில் அடுத்த வாரம் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் அந்தமான் அருகில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று வடக்கே நகரும் என்றும் ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட் , வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துக் கொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு வங்கக்கடலில் அக்டோபர்-நவம்பர் மழைக்காலங்களில் புதிய புயல் சின்னம் எதுவும் வலுப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments