தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகத்தில் விற்கப்பட்ட இட்லிக்குள் தவளை இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் முருகேசன் என்பவருக்கு அவரது உறவினர் அங்குள்ள தனியார் உணவகத்தில் நேற்று காலை 4 இட்லி வாங்கியுள்ளார். இதனை முருகேசனிடம் கொடுத்த போது அவர் இட்லி பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளார். அப்போது இட்லி ஒன்றில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உணவக உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இட்லிக்கு உரிய பணம் அவரிடம் திரும்ப தரப்பட்டதுடன் இட்லி மாவையும் கீழே கொட்டிவிட்டு கடையை மூடிவிட்டு உரிமையாளர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments