Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நியாயமான கோரிக்கை - தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பகவான் லால் ஷானி

ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நியாயமான கோரிக்கை என தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பகவான் லால் ஷானி தெரிவித்துள்ளார். பீகாரின் பாட்னா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவரும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் பின்தங்கிய சாதியினருக்கு நலத்திட்டங்களை எளிதில் வகுக்க முடியும் என்றும் பகவான் லால் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1931-ல் நடத்தப்பட்டது.      

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments