ஒமிக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வரவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பையின் டோம்பிவிலி பகுதியில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒருவரையும் அவர் குடும்பத்தினரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு உள்ள தொற்று ஒமிக்ரான் தானா என்று ஆய்வுகூடத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே டெல்லியின் தேசிய நுண்மருத்துவத்துறையின் இயக்குனர் சவுமித்ரா தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒமிக்ரான் குறித்த பதற்றம் தேவையில்லை ஆனால் எச்சரிக்கை தேவை என்று கூறினார். தடுப்பூசிகளை தயக்கம் இல்லாமல் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அது நோயின் தீவிரத்தன்மையைக் குறைப்பதில் உதவும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments