நாட்டிலேயே முதன்முறையாக மேகாலயாவில் ட்ரோன் மூலம் மலைப்பகுதிகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. வெஸ்ட் காசி என்ற மலைப்பாங்கான மாவட்டத்தில், மாவட்டத் தலைமையகத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொலைதூர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகளை வழங்குவதற்காக இந்த ட்ரோன் செலுத்தப்பட்டது. ஹைப்ரிட் இ-விடிஓஎல் டிரோன் மூலம் நாங்ஸ்டோயினில் இருந்து மாவெய்ட்டில் உள்ள சுகாதார நிலையத்திற்கு 25 நிமிடத்தில் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டதாக மேகாலயா முதல்வர் கன்ராட் கே சங்மா தெரிவித்துள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments