காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராணுவ அதிகாரி ஒருவர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, உளவுத்துறை அமைப்புகள் மற்றும் இராணுவம் ஆகியவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருப்பதாகத் தெரிவித்தார். அப்பாவிகள் தொடர்ந்து கொல்லப்பட்டது வன்முறையைத் தூண்டும் அம்சமாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இருந்து உள்ளூர் மக்களின் ஆதரவு கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments