சென்னையில் பகலில் சற்றே ஓய்ந்திருந்த மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நகரின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கனமழை பெய்துவருகிறது. இரண்டு நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. பகலில் சற்றே ஓய்ந்திருந்த மழை தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னையின் சேப்பாக்கம், கிண்டி, அசோக் நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் பகுதிகளில் மீண்டும் மழைபெய்யத் தொடங்கியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments