நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட காங்கிரஸ் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளது. அண்மையில் 12 காங்கிரஸ் எம்.எல்,ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்ததால் மேகாலயாவில் காங்கிரஸ் தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதனை மம்தா புறக்கணித்துவிட்டதையடுத்து, ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, போன்ற மேலும் சில கட்சிகள் காங்கிரஸின் அழைப்பை நிராகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments