உலகை புதிதாக அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உள்ள தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், மலாவி, லெசோதோ, ஈஸ்வதினி மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாடு எச்சரித்துள்ளது. மேற்கண்ட நாடுகளுக்கு குவைத்திலிருந்து நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்துக்கு வந்த 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஆம்ஸ்டர்டாம் விமானநிலையம் அருகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உருமாறிய ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என ஆய்வுகள் நடந்து வருகின்றன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments