கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக இறக்கிய உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொம்பம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் உமா மகேஸ்வரி என்பவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அரசிடம் இருந்து பெறக்கூடிய சமையல் பொருட்களை அரசு பள்ளியில் சிறிதளவு இறக்கி விட்டு மீதமுள்ள பொருட்களை அவர் தனது வீட்டில் இறக்கி வருவதாக புகார் கூறப்பட்டது. இதனை அடுத்து ஊத்தங்கரை வட்ட வழங்கல் அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது புகார் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து உமா மகேஸ்வரி மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை செய்யப்படும் என்றும் வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார் .
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments