கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்த மகனை மீட்டுத்தாருங்கள் என பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மனு அளித்துள்ளனர். அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜுனன் - கலைச்செல்வி தம்பதியரின் மகன் சந்தோஷ் குமார் கடந்த 2014ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். 8 ஆண்டுகள் ஆகியும் மகன் திரும்பி வராததால் மனம் உடைந்த பெற்றோர் ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் காணாமல்போன சந்தோஷ் குமார் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் அவரை கேரள போலீசார் தேடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments