புதிய வகை உருமாறிய கொரோனா இந்தியாவில் இன்னும் பரவவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 15 முதல் சர்வதேச விமானங்களுக்கு இந்தியா அனுமதியளித்துள்ளது. ஆனால் இந்த புதிய வகை கொரோனா பரவிய நாடுகளின் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காள தேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியுசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஆகிய நாடுகளின் பட்டியலில் நேற்று ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இணைக்கப்பட்டன. 75 சதவீத பன்னாட்டு விமான சேவை மீண்டும் தொடங்க உள்ள போதும் இந்த நாடுகளுக்கு இயல்பான விமான சேவையை இந்தியா அனுமதிக்கவில்லை.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments