Ticker

6/recent/ticker-posts

Ad Code

கோவை: சாமியார் வேடம் அணிந்த போலி கும்பல்... பரிகாரம் செய்வதாக கூறி வீடுகளுக்குள் நுழைந்து பணம் கேட்டதால் அதிர்ச்சி

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமியார் வேடமணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீடுகளுக்குள் புகுந்து பரிகார பூஜை செய்வதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பாப்பம்பட்டி பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வருவதாகக் கூறிக் கொண்டு காவி உடை அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் சென்றது. குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று முன்பின் தெரியாவிட்டாலும் இந்த வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் கேட்டுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த சிலர் அந்த கும்பலிடம் விசாரித்த போது அந்த கும்பல்  கொடுத்த முகவரி போலி முகவரி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசில் புகார் கொடுத்த மக்கள், போலி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments