நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து 95லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். கோத்தகிரியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சுமார் 74 போலி கணக்குகள் துவக்கப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மறைந்த சிவா மற்றும் பலர் வாடிக்கையாளர்கள் போல் கணக்கு துவக்கி போலி நகைகளை அடமானம் வைத்து 94லட்சத்து 45 ஆயிரத்து 500ரூபாயினை மோசடி செய்துள்ளதாக அந்த வங்கியின் கிளை மேலாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சம்மந்தப்பட்ட 38பேரில் 11பேரை கைது செய்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments