Ticker

6/recent/ticker-posts

Ad Code

திருவண்ணாமலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 84 பேர் பெயரில் நகைக்கடன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் இயக்குனர்கள் புகார்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 84 பேர் பெயரில் நகைக்கடன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் மகளிர் குழுக்களின் சேமிப்பு பணம் 27 லட்சம் ரூபாய் பணம் மாயமாகி உள்ளதாகவும் இவ்வங்கியின் முன்னாள் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சங்க செயலர் குப்பனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து 24லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நகைக்கடன் மோசடி குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.       

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments