Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் 12 வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 12வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும், இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, அரசு மருத்துவ மனைகளில் தினமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இது தவிர, மெகா தடுப்பூசி முகாம்களை, வாரந் தோறும் அரசு நடத்தி வருகிறது.இதுவரை, 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அரசிடம், ஒரு கோடியே 24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்தும், தடுப்பூசி போடாமல் உள்ள 78 லட்சம் பேரும், முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களும், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments