உத்தரப்பிரதேசத்திற்கு வந்த 4 வெளிநாட்டினருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரான் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நால்வரும் சுற்றி வந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு சோதனை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments