சென்னையை அடுத்த வளசரவாக்கத்தில் இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி நகை மற்றும் பணம் பறித்த 4பேர் கைது செய்யப்பட்டனர். ராமாபுரம், பாரதி சாலையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் கடந்த 23ந் தேதி தனது வீட்டில் இருந்த போது ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் வந்த 3பேர் திடீரென காயத்ரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 4பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சவரன் நகை, ஒரு கார், செல்போன் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஸ்வரியை போலீசார் தேடி வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments