ஹாங்காங்கில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 43 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹங்காங்கில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த கண்டெய்னரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 3 ஆயிரத்து 646 ஐபோன் 13 போன்கள், கூகுள் பிக்ஸல் 6 ப்ரோ போன்கள் மற்றும் ஏராளமான ஸ்மார்ட் வாட்ச்சுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 42 கோடியே 86 லட்சம் ருபாயாகும்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments