மும்பை விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவுக்கு கடத்த இருந்த 3 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணங்களை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருவரின் உடைமைகளை சோதனையிட்ட அதிகாரிகள், டிராலி பேக்-ஒன்றில் இருந்து அமெரிக்க டாலர் மற்றும் சவுதி திராம் பணங்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். பெட்டிகளை ஸ்கென் செய்யும் கருவியால் கூட கண்டுபிடிக்காத வகையில் பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் இருவரையும் கைது செய்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments