ஜெய்ப்பூரில் புகழ் மிக்க பழைமை வாய்ந்த ஓட்டலான கிளார்க் அமெரில் தங்கியிருந்த மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பெண்ணின் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்டன. மும்பையைச் சேர்ந்த ராகுல் பாட்டியா தமது குடும்பத்தினருடன் ஜெய்ப்பூர் சென்று ஆடம்பரமான ஓட்டலில் 45 அறைகள் எடுத்து தங்கியிருந்தார். அப்போது விலை உயர்ந்த வைர நகைகள் உள்பட 2 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் காணாமல் போனதாக ராகுல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஓட்டல் ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததாகவும் காலை முதலே அந்த ஓட்டலை ஒருவர் நோட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் கண்காணிப்பு கேமராவை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments