நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை 2025ம் ஆண்டுக்கு நாசா ஒத்தி வைத்துள்ளது. 2024ம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிதிப் பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகள் காரணமாக நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிலவுக்கு செல்வதற்கான விண்கலத்தைத் தயாரிக்கும் பணிக்காக, எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இதற்கு அமெசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் இத்திட்டம் 2025ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments