மெக்சிகோவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து குடியிருப்பின் மீது மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். சல்மா நகரில் உள்ள தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து, பிரேக் பெயிலியர் ஏற்பட்டு குடியிருப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments