Ticker

6/recent/ticker-posts

Ad Code

மனைவி, மகள் கண் முன்னே கடல் அலையில் சிக்கி காணாமல் போன கடற்படை அதிகாரி... 18 மணி நேர தேடலுக்கு உடல் கண்டெடுப்பு

சென்னை அடுத்த கோவளம் கடலில், மனைவி, மகள் கண்முன்னே அலையில் சிக்கி உள்இழுத்து செல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் உடல் 18 மணி நேர தேடலுக்கு பின் மாமல்லபுரம் அருகே கடலில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்த இந்திய கடற்படை அதிகாரி சுரேஷ், கடலில் குளிக்க முயன்ற போது அலையில் சிக்கி உள்ளிழுக்கப்பட்ட நிலையில் அவரை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை, உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டனர். 18 மணி நேர தேடலுக்கு பின் சுரேஷின் உடல் மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல்  ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments