தமிழகத்தில் 17 இடங்களில் சுற்றுப்புற காற்று தர அளவீடு செய்யும் நிலையங்கள் தொடங்கபடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக பட்ஜெட் 2020 -2021ல் அனைத்து மாவட்டங்களிலும் காற்று தர நிர்ணய குறியீட்டு அளவீடு கருவிகள் அமைக்கப்படும் என்கின்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதோடு சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு என்கிற திட்டம் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டது. அதில் முதல்கட்டமாக 17 இடங்களில் தொடர் கண்காணிப்பு காற்று தர அளவீடு நிலையங்கள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் காற்று மாசுபாடு குறித்த முழு தரவுகளையும் உடனடியாக தெரிந்துகொள்ள முடியும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments