நாட்டில் 13 விமானநிலையங்கள் தனியார் மூலம் இயக்கப்படுவதாகவும், இவற்றில் அதானி குழுமமே அதிக ஏலம் எடுத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.கே. சிங் பேசும்போது, நீண்ட கால குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டிற்காக பொதுத்துறை - தனியார் கூட்டாண்மைக்கு எட்டு விமான நிலையங்களை இந்திய விமான ஆணையம் குத்தகைக்கு விட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இவற்றில் 13 விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், அதானி குழுமம் 6 விமானநிலையங்களை குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments