மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்கள் வாரியாக 30.10.2021 வரை விதிகளைமீறி குப்பைகள் கொட்டியதற்காக 16,28,200 ரூபாய் மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. மேலும் கட்டடக் கழிவுகள் கொட்டியதற்காக இன்று வரை 15,04,600 ரூபாய் சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டியவர்களுக்கு 15 மண்டலங்கள் வாரியாக அபராதம் விதிக்கப்பட்ட தொகை மட்டும் 46,200. கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டதற்காக 43,700 ரூபாய் சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. 15 மண்டலங்களில் மண்டலம் 14இல் மட்டுமே இன்று ஒரே நாளில் குப்பைகள் கொட்டப்பட்டதற்கு அதிகபட்சமாக 7000 ரூபாய் அபராதம் மாநகராட்சி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏழை நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments