மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இன்று அதிகாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாரடைப்பால் காலமான நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று அதிகாலை தொடங்கியது.பெங்களூரில் -அலங்கரிக்கப்பட்ட மலர் வாகனத்தில் புனித் ராஜ்குமாரின் உடல் அவர் தந்தை ராஜ்குமார் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெரும் திரளாக அங்கு ரசிகர்கள் திரண்டனர். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.அங்கு அரசு மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவருடைய உடல் காந்திவீரா மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள் சரத்குமார், பிரபுதேவா, சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்பட ஏராளமானோர் மலர் மாலை சாத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் தந்தையின் மரணச் செய்தி கேட்டு வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த புனித்தின் மகள் திரித்தி, காந்திவீரா மைதானத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தமது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார .மகளின் வருகைக்காகவே இறுதிச் சடங்கு ஒருநாள் தாமதமானது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments